வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (09/09/2015)

கடைசி தொடர்பு:14:25 (09/09/2015)

லேப் டாப் திட்டத்தை அமெரிக்காவே பாராட்டுகிறது: மாநாட்டில் அமைச்சர் தங்கமணி பெருமிதம்!

சென்னை: விலையில்லா லேப் டாப்  திட்டத்தை அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகமே பாராட்டியுள்ளது என்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி பெருமிதத்துடன் கூறினார்.
 

சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அமைச்சர் தங்கமணி பேசுகையில்," தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழகத்தில் நடத்துவது பெருமையளிக்கிறது.

அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலையில்லா லேப் டாப்  திட்டத்தை அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகமே பாராட்டியுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வர மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டை உலகமே வியந்து பார்க்கிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்