வெளியிடப்பட்ட நேரம்: 08:56 (02/12/2011)

கடைசி தொடர்பு:08:55 (02/12/2011)

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவச சட்ட உதவி மையம்

சென்னை: தமிழகத்தில் மேலும் 16 மாவட்டங்களில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான இலவச சட்ட உதவி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் வி.எஸ்.விஜய் கூறினார்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், சென்னையில் நேற்று உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடைபெற்றது. எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் வி.எஸ்.விஜய் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் வி.எஸ்.விஜய் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் இலவச எச்.ஐ.வி. ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் 863 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. 2 கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் திருபத்தூர், மணப்பாறையில் அமைக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவுடன் இணைந்து, தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இலவச சட்ட உதவி மையங்களை நிறுவி, அதன் வாயிலாக எச்.ஐ.வி.யுடன் வாழும் மக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியான உதவிகளை அளித்து வருகிறது. மீதமுள்ள 16 மாவட்டங்களில் இந்த இலவச சட்ட உதவி மையம் ஆரம்பிக்கப்பட உள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்