மனைவியுடன் ஸ்டாலின் கோவிலுக்கு திடீர் வருகை; சாமி தரிசனம்: கட்சியினரிடையே பரபரப்பு! | M.K.Stalin Visits Thirukoshtiyur Sri Sowmiyanarayana Perumal Temple

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (29/09/2015)

கடைசி தொடர்பு:13:43 (29/09/2015)

மனைவியுடன் ஸ்டாலின் கோவிலுக்கு திடீர் வருகை; சாமி தரிசனம்: கட்சியினரிடையே பரபரப்பு!

சிவகங்கை: நமக்கு நாமே பயணம் தொடங்கியுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.

ஸ்டாலின் தனது 'நமக்கு நாமே' பயணத்தின் 10 ஆவது நாளான இன்று, திருக்கோஷ்டியூர் நோக்கி மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். சுற்றுப்பயணத்தில் திட்டமிடாத பகுதிக்கு ஸ்டாலின் சென்றதால் தொண்டர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். 108 வைணவத்தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு அவர் சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு ஸ்டாலினுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு மு.க.ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்ததும், அங்கு ஏராளமான மாணவர்கள் திரண்டனர். அவர்களிடமும், பக்தர்களிடமும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருப்பத்தூரில் உள்ள உழவர் சந்தைக்கு சென்ற மு.க.ஸ்டாலின், சந்தை செயல்படும் விதத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கலந்துரையாடினார். அப்போது குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்