சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை பணம் கொள்ளை; அரியலூரில் பரபரப்பு! | Robbery near Ariyalur!

வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (12/10/2015)

கடைசி தொடர்பு:18:41 (12/10/2015)

சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை பணம் கொள்ளை; அரியலூரில் பரபரப்பு!

ஞ்சாவூரில் நகைக்கடை நடத்திவருபவர் சபரி. கடைகளில் வரும் பழைய நகைகளை சென்னையில் உள்ள கடைகளில் கொடுத்துவிட்டு புதிய நகைகளை வாங்கிவருவது வழக்கம்.அதே போல்  இவா் இன்று தஞ்சாவூரில் இருந்து பதினைந்து லட்ச ரூபாய் மதிப்பிலான பழைய நகைகளை எடுத்தக் கொண்டு சென்னை செல்வதற்காக அரியலூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 4 பேர்  சபரியிடம் “ நாங்கள் மத்திய சுங்கத்துறை புலனாய்வுத்துறை அதிகாரிகள். உங்கள் மீது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. உங்களை விசாரிக்கவேண்டும். சரியாக வரி கட்டுகிறீர்களா. உங்கள் மீது சந்தேகமாக உள்ளது" என்றதோடு, "நீங்கள் கையில் வைத்திருப்பதை காட்டுங்கள்..."  என சபரியிடம் கேட்டு நகையை பறித்துள்ளனர்.

மேலும் சபரி அணிந்திருந்த 3 சவரன்  நகை, விலையுயர்ந்த செல்போன், ரூ.6 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை சரிபார்ப்பதுபோல் பார்வையிட்டனர். அப்போது அரியலூர் ரயில் நிலைய அதிகாரிகள் வருவதை பார்த்த மர்ம நபர்கள்,  அங்கிருந்து ஓடத்தொடங்கினார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரி,  அரியலூா் ரயில் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தனார்.

போலீசார், உடனே அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா். சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து செக்போஸ்ட்களுக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து கீழப்பழுவூா் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்க்கு இடமாக இரண்டு பைக்கில் வந்த 5 பேரை  வழிமறித்தனா்.

அவா்கள் பயந்து பைக்கை கிழே போட்டு தப்பி ஓடினா். இதையடுத்து தப்பி ஓடிய 5 பேரில் 2 பேரை போலீசாருடன், பொது மக்களும் இணைந்து துரத்தி பிடித்தனா். அவா்களிடம் விசாரணை நடத்தியதில் அவா்கள் தஞ்சாவூரை சோ்ந்தவர்கள் என்றும், இருவரது பெயருமே  மணிகண்டன் என்பதும், சபரியிடம் நகைகைள் கொள்ளையடித்தது அவர்கள்தான் என்பதும் தெரியவந்தது.

பின்னா் அரியலூா் ரயில்வே போலீசார் அவா்கள் இருவரையும் கைது செய்து,  2 பைக்குகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

- எம்.திலீபன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்