நலத்திட்ட உதவியை அடிச்சுதான் கொடுக்கணுமா? சர்ச்சையில் சிக்கிய அதிமுக எம்எல்ஏ! ( வீடியோ) | AIADMK MLA beaten labour creates controversy

வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (31/10/2015)

கடைசி தொடர்பு:09:49 (01/11/2015)

நலத்திட்ட உதவியை அடிச்சுதான் கொடுக்கணுமா? சர்ச்சையில் சிக்கிய அதிமுக எம்எல்ஏ! ( வீடியோ)

சேலம்: நலத்திட்ட உதவி வழங்கும் போது,  கேமராவை பார்க்காத நலிந்த தொழிலாளர் ஒருவரின் தலையில் சின்னசாமி எம்.எல்.ஏ. அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் நேரு கலையரங்கில் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. இதில், எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், சுந்தரம், அமைச்சர்கள் எடப்படி பழனிச்சாமி, பழனிப்பயன், தங்கமணி, வீரமணி, கோவை மாவட்டம், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. சின்னசாமி, மேயர் சவுண்டப்பன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறையில் உள்ள நலிந்த மூத்த தொழிலாளர்கள் 14 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.14 லட்சம் வழங்கப்பட்டது.

அதன் ஒரு அம்சமாக, நலிந்த தொழிலாளர் ஒருவரை மேடைக்கு வரவழைத்து உதவித்தொகை வழங்கப்பட்டது. அப்போது அவர் கேமராவை பார்க்கவில்லையாம். இதனால், அவருக்கு பின்னால் இருந்த சின்னசாமி எம்.எல்.ஏ.,  அவரை தலையில் அடித்து கேமராவை பார்க்குமாறு கூறியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் முதியவர் ஒருவரை எம்.எல்.ஏ. அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்