தமிழக காங்கிரசில் மீண்டும் நாற்காலி மோதல்?

மிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பதவி ஆசை காரணமாக போட்டி போட்டுக் கொண்டு இருப்பதாக இளங்கோவன் வேதனை தெரிவித்துள்ளார்.

மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் அறிமுகக் கூட்டம்  அரும்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய இளங்கோவன்,

''தமிழகத்தில் தற்போதுதான்  காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் உண்மையாக உழைக்கின்றனர். தலைவர்கள்தான் பதவிக்கு போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர். நான் எம்.பியாக இருந்த போது எனது பையை நிரப்பவில்லை. மாறாக மக்கள் மனதை நிரப்பினேன்'' என்றார். 
 
தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு,வசந்தகுமார், உள்ளிட்டோர் அந்த கட்சியின்  துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்து தமிழகத் தலைமை  மீது புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இளங்கோவன் இத்தகைய கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தியை தமிழகத் தலைவர்கள் சந்தித்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் இளங்கோவன் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!