வடலூரில் வெந்நீர் சுரக்கும் அதிசய கிணறு!

கடலூர்: கிணற்றில் ஆவி பறக்கும் வெந்நீர் வரும் அதிசயத்தை வியப்புடன் பார்த்துச் செல்கிறார்கள் பொதுமக்கள்.

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் எப்போதும் போல் இன்று குளிப்பதற்காக தன்னுடைய வீட்டு கிணற்றிலிருந்து வாளியின் மூலம் தண்ணீர் எடுத்துள்ளார். அந்தத்  தண்ணீர் வழக்கத்திற்கு மாறாகத்  திடீர் என்று ஆவி பறந்து கொண்டு வெந்நீராக வந்துள்ளது. இதைப் பார்த்ததும் வியந்துபோன ராஜா, அக்கம் பக்கத்திலிருப்பவர்களிடம் கூறியுள்ளார்.

கிணற்றில் வெந்நீர் சுரக்கும் செய்தி அப்பகுதியில் காட்டு தீயாகப் பரவியது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெந்நீர் சுரக்கும் அதிசய கிணற்றைப்  பார்த்துவிட்டு, அந்தத்  தண்ணீரை பாட்டிலிலும் பிடித்துச்  செல்கின்றனர்.

கடந்த ஒரு வாரம் காலமாக வடகிழக்குப்  பருவ மழையால், கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாகி பூமி குளிர்ந்து மக்கள் குளிரில் நடுங்கிகிடக்கும் சூழலில் இப்படி நடப்பது உண்மையிலேயே அதிசயம்தான் என்கின்றனர் பொதுமக்கள்.

அதிசய கிணற்றைப்  பார்க்க வரும் மக்கள் கூட்டம் அதிகமாகவே, அந்த இடத்திற்குப் பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளனர் போலீஸார்.
                       
-க.பூபாலன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!