வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (21/11/2015)

கடைசி தொடர்பு:12:26 (21/11/2015)

தமிழகத்தில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 230 பேர் பலி!

சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 230 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தமிழகத்தில் கொட்டி தீர்த்த மழையால் குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் குளம், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் தங்கள் கால்நடைகளை இழந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிக்கூடம் மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழையால்  கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளில் புகுந்துள்ள மழை நீர், இன்னும் வடியாமல் இருக்கிறது.

இதனிடையே தமிழகத்தில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 230 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 53 பேரும், சென்னையில் 30 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்