விஷ்ணுபிரியாவுடன் நட்பில் இருந்த வழக்கறிஞர் மாளவியா தற்கொலை முயற்சி! | Advocate in Vishnupriya's Case Attempts Suicide

வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (26/11/2015)

கடைசி தொடர்பு:10:55 (26/11/2015)

விஷ்ணுபிரியாவுடன் நட்பில் இருந்த வழக்கறிஞர் மாளவியா தற்கொலை முயற்சி!

டி.எஸ்.பி. டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவுடன் நட்பில் இருந்தாக போலீசாரால் விசாரணை செய்யப்பட்ட மதுரை வழக்கறிஞர் மாளவியா, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், தலித் சமுதாயத்தை சேர்ந்த என்ஜீனியரிங் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரணை செய்து வந்த டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கினை, தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரது செல்போன் பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மாளவியா என்பவர் விஷ்ணுபிரியாவுடன் அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து  டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறி, வழக்கறிஞர் மாளவியாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு பின், மாளவியா அளித்த பேட்டியில், தானும் விஷ்ணுபிரியாவும் காதலில் இருந்து வந்ததாக கூறியும், அதனை ஒப்புக்கொள்ளுமாறும் போலீசார்  நெருக்கடி அளித்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர் மாளவியா,  நேற்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே விஷமருந்திய நிலையில் மயங்கி கிடப்பது தெரிய வந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். மதுரை ராஜாஜி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்போது 31 வயது நிரம்பிய மாளவியாவிடம், விஷமருந்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அவர்  ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக எந்த வழக்கும் பதியப்படவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்