ராஜீவ் காந்தி கொலை : குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது- உச்சநீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை  விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லையென உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரை,  ராஜீவ் கொலை குற்றவாளிகளை CRPC 435(1) பிரிவில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை  எனவும்  மத்திய அரசுதான் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டுமெனவும் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அதோடு ஆயுள் தண்டனை காலத்தை குறைக்கும் அதிகாரமும் மாநில அரசுக்கு இல்லையென்றும், ஆயுள் தண்டனை குறிப்பிட்ட வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டால், அதனை குறைக்க முடியாது எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 ஆயுள் கைதிகளை விடுவிப்பதில் பிரச்னை வந்தால் மத்திய அரசே இறுதி முடிவு எடுக்க முடியும். சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் விசாரித்து வந்த வழக்கில் மத்திய அரசுக்கே அதிகபட்ச அதிகாரம் இருக்கிறது என்று அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி தமிழக அரசு விடுதலை செய்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!