வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (03/12/2015)

கடைசி தொடர்பு:14:23 (03/12/2015)

வெள்ள நீரில் தத்தளிப்பவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்!

சென்னை: சென்னையின் பல இடங்களில் வெள்ள நீரால் சூழப்பட்டு, வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்களுக்கு விமானப்படை விமானம் மூலம் உணவு பொட்டலங்கள் அடங்கிய மூட்டைகள் போடப்பட்டன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாம்பரம்,  பெருங்களத்தூர், முடிச்சூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வரலாறு காணாத மழையால்  கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.  50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தை விட பலமடங்கு தண்ணீர் வீடுகளில் புகுந்தது. இதனால் பலவீடுகளில் முதல் மாடி வரை தண்ணீரில்  முழ்கியது.  மீட்பு பணியில்  தீயணைப்பு வீரர்கள்,  தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல்படை ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் மீனவர்களும் மீட்பு பணியில் இறங்கி உள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை படகுகள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது. மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யபடுகிறது.

வெள்ளத்தில் சிக்கிய சென்னைவாசிகளுக்கு உதவி செய்ய, அவர்களை மீட்க, நேற்று ராணுவத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. கப்பலில், மீட்பு பணிக்கு தேவையான பொருட்களுடன், இன்று காலை கடற்படையினர் சென்னை துறைமுகத்திற்கு வந்தனர்.

விமானப்படை சார்பில் 5க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. இதில், இன்று 2 ஹெலிகாப்டர்கள் மூலம், வெள்ள நீரால் சூழப்பட்டு, வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்களுக்கு விமானப்படை விமானம் மூலம் உணவு பொட்டலங்கள் அடங்கிய மூட்டைகள் போடப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்