வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (03/12/2015)

கடைசி தொடர்பு:16:05 (03/12/2015)

கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ நிதியுதவி செய்ய முன்வந்த பெங்களூருவாசிகள் !

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சென்னையில் கர்ப்பிணி பெண்களின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ள, பெங்களூரை சேர்ந்த ஆதித்யா வெங்கடேஷ் என்பவர் முன் வந்துள்ளார்.

சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கன மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அதிலும் கர்ப்பிணி பெண்கள் படும் அவஸ்தைகளை சொல்லி மாள முடியாது. மகப்பேறு மருத்துவமனைகளே தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த ஆதித்யா வெங்கடேஷ் என்பவர், சென்னை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு சிரமத்திற்குள்ளாகி உள்ள கர்ப்பிணி  பெண்களின் மருத்துவச் செலவுகளுக்கு தேவையான நிதியுதவியை செய்ய முன் வந்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், '' கர்ப்பிணி பெண்கள் அப்பலோ உள்பட எந்த மருத்துவமனைக்கும் சென்று குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு நிதியுதவி செய்ய நானும் எனது நண்பர்களும் தயாராக உள்ளோம். ஏழ்மை நிலையில் உள்ள கர்ப்பிணி பெண்கள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உடனடியாக மருத்துவ நிதியுதவிக்கு எங்களை அணுகவும் '' என இந்தோ- ஏசியன் செய்தி நிறுவனம் கூறியுள்ளதாக டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

இது குறித்து ஆதித்யா வெங்கடேஷிடம் பேசிய போது, ''நானும் எனது நண்பர்களும் இந்த முடிவை எடுத்துள்ளோம். 10 முதல் 12 கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி செய்ய முடிவடுத்துள்ளோம்'' என்றார்.

ஆதித்யா வெங்கடேஷ், தனது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார். அவரது தொடர்பு எண் - 09901951808.

நீங்க எப்படி பீல் பண்றீங்க