பெங்களூருவிற்கு சிறப்பு ரயில்; 3 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்!

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், 3 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்குகிறது தெற்கு ரயில்வே. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு பெங்களூருக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக பெங்களூருக்கு சென்றடைகிறது. மேலும் இந்த ரயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோழிங்கர், வாலாஜாரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

மேலும், ஆழப்புழா-தன்பாத் விரைவு ரயில் மேல்பாக்கம், ரேணிகுண்டா, கூடூர் வழியாக இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம்-கோர்பா விரைவு ரயில் மேல்பாக்கம், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படுகிறது. நாகர்கோவில்-மும்பை விரைவு ரயில் காட்பாடி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படுகிறது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!