மூன்று நாட்களாக ஒரு வேளை மட்டும் உண்டு நிவாரணம் அளித்த பாலியல் தொழிலாளர்கள்! | Maharashtra sex workers donate Rs 1 lakh for Chennai flood

வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (08/12/2015)

கடைசி தொடர்பு:12:52 (08/12/2015)

மூன்று நாட்களாக ஒரு வேளை மட்டும் உண்டு நிவாரணம் அளித்த பாலியல் தொழிலாளர்கள்!

மிழக வெள்ள நிவாரண நிதிக்காக மகாராஷ்டிர பாலியல் தொழிலாளர்கள் ஒரு லட்ச ருபாய் நிதியுதவி அளித்துள்ளனர்.

அகமத்நகர் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் ரு. 1 லட்சத்திற்கான காசோலையை அந்த  மாவட்ட ஆட்சியர் அனில் கவாடேவிடம் வழங்கினர்.

இது குறித்து ஸ்னேகாலயா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கிரிஷ் குல்கர்னி கூறுகையில், ''இந்த மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் தலா 2 ஆயிரம் தமிழக நிவாரணப்பணிக்காக வழங்கியுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, அதில் மிச்சப்படுத்தியதை  தமிழகத்துக்கு நிவாரணமாக அளித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட இந்த வெள்ள செய்திகள் குறித்து கேள்விபட்டதும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்திருந்தனர். தமிழகத்திற்கு மேலும் வெள்ள நிவாரண நிதி வழங்க பாலியல் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.  இது தொடர்பாக நாங்கள் டெல்லியில் செயல்பட்டு வரும் கூஞ்ச் தொண்டு நிறுவனத்தை அணுகியுள்ளோம்'' என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்