வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (02/01/2016)

கடைசி தொடர்பு:17:18 (02/01/2016)

என்னது டாஸ்மாக்கை மூடப் போறாங்களா!? - நம்பலாமா... நம்பக் கூடாதா?

ச்சரியம்....ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும்.

டாஸ்மாக் மூடப்படுகிறதோ  என்ற சந்தேகம் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கும், பொங்கலுக்கும் டார்கெட் வைத்து கோடிகளை சாதாரணமாக அள்ளிடும் தமிழக அரசு, இந்த முறை டாஸ்மாக் ஊழியர்களுக்கு 'இலக்கு' எதையும் பெரிதாய் நிர்ணயிக்கவில்லை.

 கடந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டாஸ்மாக் விற்பனையில் 175 கோடியை 'அள்ளிய' அரசு, இம்முறை (1.1.2016) அதைவிட 25 கோடி ரூபாய் குறைவாகவே  மதுபானங்களை விற்றிருக்கிறது. விற்பனையில் 25 கோடி குறைந்தும் கூட  அதைப் பற்றி அரசு நிர்வாகம் அலட்டிக் கொள்ளவில்லையாம். நம்மோடு போட்டி போடும் அளவுக்கு பிற மாநிலங்கள் (தெலுங்கானா 300 கோடி ரூபாய்தான்) வளரவில்லை என்பது ஆறுதலாக இருக்கலாம்).

தமிழகத்தைப் புரட்டிப் போட்ட நவம்பர்-டிசம்பர் 2015-ன் வெள்ள 'சோதனை'க்குப் பிறகு தமிழக அரசிடம் மதுபானக் கொள்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே டாஸ்மாக் ஊழியர்கள் நினைக்கிறார்கள். இது குறித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் பேசியபோது அவர்கள் பகிர்ந்து கொண்டவை இங்கே...

"இந்த முறை ஏரியா சூப்பர்வைசர்கள், டி.எம். (டிஸ்ட்ரிக்ட் மேனேஜர்கள்) யாரும் ’எம்.டி. ஆபிசில் சொல்லி விட்டிருக்காங்க’ என்று சொல்லி புதுப்புது சரக்குகளை அனுப்பி விற்கச் சொல்லி நிர்பந்திக்கவில்லை.

’கையிருப்பில் இருக்கும் சரக்குகளை 31-ந்தேதி ராத்திரிக்குள் விற்று விடுங்கள், வேறு சரக்கு வந்து சேரும்!’ என்றும் நெருக்கடி கொடுக்கவில்லை. முன்னர் இது போன்ற கொண்டாட்ட தினங்களில் 'கையிருப்பு சரக்கை' எப்படியெல்லாம் காலி செய்யலாம் என்று டிப்ஸ் கொடுக்க எம்.டி. ஆபீசிலிருந்தே ஆட்கள் வருவார்கள். ஆனால், இந்த முறை அப்படி யாரும் வந்து போகவில்லை. மொத்தத்தில் டாஸ்மாக் பற்றி இப்போது அடக்கி வாசிக்கிறார்கள் என்று எங்களுக்கு பளிச்சென தெரிகிறது. அதற்கு காரணம் தேர்தலா அல்லது கொள்கை ரீதியான முடிவா என்பது எங்களுக்குத் தெரியவில்லை!’’ என்கிறார்கள்.

எது எப்படியோ...நல்லது நடந்தா சரி!


- ந.பா.சேதுராமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்