பொங்கலோ பொங்கல், மாட்டுப் பொங்கல்....

தை மாதத்தின் 2-ஆம் நாள் (16-ஆம் தேதி), மாட்டுப் பொங்கல். 'காவோ வை ஸர்வா தேவதா’ என்கிற வாக்கின்படி, கோமாதாவைப் போற்றுகிற அற்புதமான நாள்.

ஸ்ரீமகாலட்சுமி மட்டுமின்றி அனைத்துத் தெய்வங்களும் பசுவில் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, பசுவுக்கான அனைத்து வழிபாடுகளைச் செய்வது உத்தமம். 
 

பசுவுக்கு உணவளிப்பதும் அதனைப் பராமரிப்பதும் நம் பாவங்களை விலக்கி, சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பதை அறிந்து, வணங்குங்கள்

ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. வீர விளையாட்டான 'ஜல்லிக்கட்டு’. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை மாவட்டம், சிராவயல் என்று தமிழகத்தின் பல இடங்களிலும் நடப்பது தொன்று தொட்டு வழக்கம்.

அந்த விளையாட்டில் கலந்து கொண்டு தங்கள் மாடுகள் வெற்றிபெறுவதை பெரும் கவுரவமாக கருதுவதால், இதற்காகவே போட்டி போட்டுக் கொண்டு பலரும் காளை மாடுகளை வளர்ப்பது வழக்கம்.

இப்படி வளர்க்கப்படும் காளைகள், பலரது வீடுகளிலும் குழந்தைகளாக, குலசாமியாகவே போற்றப்படுகின்றன. இதற்கு சாட்சி,  காளைகளுக்காகவே கட்டப்பட்டிருக்கும் கோயில்கள். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள நீரைத்தான் கிராமத்தில் 'பாண்டி’ என்று பெயரிடப்பட்டு வளர்க்கப்பட்ட காளையின் கல்லறையில், இன்றும் பொங்கல் வைத்து வணங்குவது கடைபிடிக்கப்படுகிறது.

இப்படி தங்கள் வாழ்வோடு கலந்திட்ட வாயில்லா ஜீவன்களை வணங்கும் விதமாக கொண்டாடப்படுவதே மாட்டுப் பொங்கல்.

மாட்டுப்பொங்கலை கொண்டாடுவோம். மனநிறைவு அடைவோம்.

-இ.லோகேஸ்வரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!