'நேதாஜி ஒரு போர்குற்றவாளி' - பிரிட்டனுக்கு நேரு எழுதிய கடிதம்!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸை போர்குற்றவாளி என குறிப்பிட்டு , சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய கடிதம் உள்பட பல முக்கிய ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

கடந்த அக்டோபர் 14-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்தினர் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது  நேதாஜி தொடர்பான ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும் என அவர்களிடத்தில் பிரதமர் உறுதியளித்திருந்தார்.

அதன்படி,  நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 120வது பிறந்தநாளான இன்று, அவரது மரணம் தொடர்பான 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த ஆவணங்கள் அனைத்தும் தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்களில் நேதாஜி குறித்து, பிரிட்டன் அரசுக்கு நேரு எழுதிய கடிதமும் ஒன்று. அந்த கடிதத்தில் நேதாஜியை நேரு 'ஒரு போர்க்குற்றவாளி ' என குறிப்பிட்டுள்ளார் நேரு.  இது குறித்த ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது. அதே வேளையில் நேதாஜியை போர்குற்றவாளி என நேரு குறிப்பிட்ட கடிதத்தை  காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது. மேலும் நேதாஜி விமான விபத்தில் இறந்ததை நேரு நம்பவில்லை என மற்றொரு ஆவணம் தெரிவிக்கிறது.

நேதாஜி மரணம் அடைந்தவுடன்,  நேதாஜியின் மகளுக்கு காங்கிரஸ் கட்சி 6 ஆயிரம் ரூபாய் வழங்கியதாகவும்,  அதனை நேதாஜியின் குடும்பத்தினர் வாங்க மறுத்தது தொடர்பான ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!