பாஜகவில் இணைந்தார் இயக்குநர் விசு!

சென்னை: திரைப்பட  இயக்குநர் விசு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
 
திரைப்பட இயக்குநர் விசு இன்று(சனி) சென்னை பாஜக தலைமை அலுவலகம் சென்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,"  பிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தைத்  தந்து வருகிறார். மேலும் அவர் மாற்றத்தைத்  தருவார் என்ற நம்பிக்கையில் தான் பாஜகவில் இணைந்துள்ளேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் விசு கடந்த 2006 ம் ஆண்டு அஇஅதிமுகவில் இணைந்தார்.அதைத் தொடர்ந்து ஜெயா டிவியில் நீண்ட ஆண்டுகளாக விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியை நடத்தினார்.

பின்னர் அண்மைக்காலமாக அரசியல் செயல்பாடுகள் இன்றி இருந்தார். இந்நிலையில் பாஜகவில்  விசு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!