போலியான திட்டங்களில் முதலீட்டாளர்கள் சேர்ந்து ஏமாற வேண்டாம்: செபி இயக்குநர்!

சென்னை: நாணயம் விகடன் சார்பில் நடத்தப்படும் முதலாவது ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செபியின் சென்னை மண்டல இயக்குநர் டி.ரவிக்குமார், போலியான திட்டங்களில் முதலீட்டாளர்கள் சேர்ந்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் , முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  இதுவரை 'செபி',  30,000 முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவித்த அவர், பொதுமக்கள் மேற்கொள்ளும் முதலீட்டு திட்டங்களில் சந்தேகம் ஏதேனும் இருந்தால்,  ரிசர்வ் வங்கி அல்லது 'செபி'யிடம் புகார் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

செபியின் சென்னை மண்டல இயக்குநர் டி.ரவிக்குமார்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதலீடு குறித்து ஊக்கப்படுத்தும் வகையில் வினாடி வினா, சிறப்பு தேர்வுகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி 'செபி'  மாணவர்களை அலுவலகம் வரவழைத்து முதலீடு குறித்து ஊக்கப்படுத்தி வருவதாகவும் டி.ரவிக்குமார் தெரிவித்தார்.

நாணயம் விகடன் சார்பில்,  இன்றும்(திங்கள்) நாளையும் (செவ்வாய்) சென்னையில்  ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ் என்னும் மாபெரும் கருத்தரங்கம் முதல் முறையாக நடத்தப்படுகிறது.

 

இந்த கருத்தரங்கத்தில் இந்திய அளவிலும் உலக அளவிலும் உள்ள முக்கியமான பொருளாதார நிபுணர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

இன்று (பிப்1-ம் தேதி) முழுக்க நிதி மற்றும் முதலீடுகள் பற்றியும், நாளை (பிப்- 2ம் தேதி) தொழில் துறை பற்றியும் இந்த கருத்தரங்கில் விரிவாகப் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!