மகாமகத்தில் குளிக்க ஜெயலலிதா வரக்கூடாது... இளங்கோவன் தடாலடி!

கும்பகோணம்: கடந்த மகாமகத்தின்போது முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டதால் துக்க நிகழ்வு நடைபெற்றுவிட்டது. அதனால், வரும் மகாமகத்தின்போது அவர் இங்கு குளிக்க வரக்கூடாது என்று இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கும்பகோணம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கடந்த மகாமகத்தின்போது முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா கலந்து கொண்டதால் துக்க நிகழ்வு நடைபெற்று விட்டது.

மகாமகத்தின்போது அவர்கள் இங்கு குளிக்க வந்தார்கள். அதை பார்ப்பதற்கு வந்த பலர் பரிதாபமாக பலியானார்கள். அதனால், வருகின்ற மகாமக விழாவில் குளிக்க முதலமைச்சர் ஜெயலலிதாவும், சசிகலாவும் இங்கு வரக்கூடாது.

மதுவிலக்கை அமல்படுத்தக் கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. அ.தி.மு.க. அரசின் அமைச்சராக இருக்கும் நத்தம் விசுவநாதன் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அதனை அமல்படுத்தினால் மாநில அரசுக்கு 1.40 கோடி நஷ்டம் ஏற்படும் என்கிறார். அதனால், மாநில அரசுக்கு மது விலக்கை அமல்படுத்தும் எண்ணம் இல்லை.

காங்கிரஸ் ஆட்சியில் ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்தபோது சாராயம், கள்ளுக்கடையால் ரூ.25 கோடி வருமானம் கிடைத்தது. ஆனால் அவர் அந்த வருமானம் வேண்டாம் என்று நினைத்து தமிழ்நாட்டில் இருந்த 25 மாவட்டங்களில் மது விலக்கை அமல்படுத்தினார்" என்றார்.

செய்தி, படம்: கே.குணசீலன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!