குதிரையையும் விட்டு வைக்கவில்லை!

கோவையில் முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  அசுவமேத யாகம் நடைபெற்றது.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

சரவணம்பட்டியில் உள்ள  ரத்தினகிரி குமரக்கடவுள் கோவிலில் சிறப்பு படியும், அதனைத் தொடர்ந்து அசுவமேத யாகமும் நடைபெற்றது. யாகத்துக்கு குதிரைகளும் அழைத்து வரப்பட்டன. அப்போது குதிரையின்  நெற்றியில் முதல்வர் ஜெயலலிதா படத்துடன்  நெற்றிப்பட்டம் கட்டப்பட்டிருந்தது. 

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

சமீபத்தில் கோவையில் அ.தி.மு.க., சார்பில் நடந்த இலவச திருமண விழாவில், மணமக்களுக்கு ஜெயலலிதா ஸ்டிக்கருடன் நெற்றிப்பட்டம் கட்டப்பட்டிருந்தது. தற்போது குதிரையிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

வரும் 24-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரின் பிறந்த நாள் வருகிறது. அதற்குள் இது போன்று எத்தனை காட்சிகளை பார்க்கப் போகிறோமோ? என்று பொதுமக்கள் புலம்பினர்.

ஸோ.. ஸ்டிக்கர் ஒட்டுவதில் அதிமுகவினர் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை!

- படங்கள்: தி.விஜய்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!