வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (25/02/2016)

கடைசி தொடர்பு:14:01 (25/02/2016)

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 10 அறைகள் தரைமட்டம்!

விருதுநகர்: சிவகாசி பட்டாசு ஆலை ஒன்றில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 அறைகள் தரைமட்டமாகின.

நாராணபுரம் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து 2 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தீயின் வேகம் கடுமையாக இருப்பதால், மேலும் 7 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த விபத்தினால் யாருக்கும் உயிர்சேதமோ, காயமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் இல்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்