Published:Updated:

குமரியில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் சிக்கி பலியான 6 மாத யானைக்குட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மழை வெள்ளத்தில் சிக்கி இறந்த யானை குட்டி
மழை வெள்ளத்தில் சிக்கி இறந்த யானை குட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி குட்டி யானை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும், நேற்று முன் தினமும் கொட்டித் தீர்த்த மழையால் மாவட்டமே வெள்ளக்காடானது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் மறுகால் திறக்கப்பட்டன. முக்கடல் அணை முழுக்கொள்ளளவான 25 அடியை சில நாட்களுக்கு முன்பே எட்டிவிட்டது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 44.24 அடியை எட்டியுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 74.59 அடியை எட்டியுள்ளது.

மழை அதிகமாக பெய்துவந்ததால் இந்த அணைகளில் வரத்து தண்ணீரைக் கணக்கில்கொண்டு கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று சில பகுதிகளில் 200 மி.மீட்டருக்கு மேல் மழை அளவு பதிவானது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேம்பனூர் ஏலா உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த நெல் வயல்களை அறுவடை செய்யமுடியாத அளவுக்கு மழை பெய்தது. மேலும் தென்னை மர தோப்புகளுக்குள் தண்ணீர் பெருகியது. இதனால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

குமரியில் மழை
குமரியில் மழை
கேரளா: நிலச்சரிவில் 6 பேர் பலி; சில பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்; சபரிமலையில் அனுமதி மறுப்பு

மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக காட்டுப்பகுதியில் உள்ள ஆறுகளிலும், ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையின் மீதுள்ள கோதையாறு, மோதிரமலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக வனத்தில் உள்ள கோதமடக்கு தடுப்பணை பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இன்று மழை இல்லாத நிலையில் வனப்பகுதியில் வெள்ளம் வடிந்து வருகிறது. இதையடுத்து மலைவாழ் மக்கள் கோதமடக்கு தடுப்பணைப்பகுதிக்குச் சென்ற சமயத்தில் தண்ணீரில் ஒரு குட்டி யானை மிதப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இறந்த யானை குட்டி
இறந்த யானை குட்டி
T23 புலி: `சிகிச்சைக்குப் பின் வண்டலூர் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படும்!' - வனத்துறை அமைச்சர்

களியல் சரக வனத்துறையினர் அங்கு சென்று உயிரிழந்த யானைக்குட்டியின் உடலை மீட்டனர். பின்னர் வனத்துறை கால்நடை மருத்துவக்குழுவினர் யானையின் உடலை உடற்கூறு ஆய்வுமேற்கொண்டனர். இதில் இறந்தது ஆறு மாதம் மதிக்கதக்க ஆண் யானை என தெரியவந்தது. குட்டி யானை காட்டாற்று வெள்ளத்தில் அடித்துவரப்படிருக்கலாம் எனவும், தண்ணீரில் சிக்கி யானை இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பிறந்து ஆறு மாதமே ஆன யானை குட்டி இறந்த சம்பவம் வன உயிர் ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு