Published:Updated:

`முத்தலாக் தடைச் சட்டம்' - புதுக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு!

புதுக்கோட்டையில், முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர், ஷேக் அப்துல்லா. இவரது மனைவி ரிஸ்வானா பேகம்(25). இவர்களுக்கு, கடந்த 2017ல் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

முத்தலாக்
முத்தலாக்

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற குடும்பத்தகராறில், இனி ரிஸ்வான பேகத்துடன் சேர்ந்து வாழ முடியாது என மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு ஷேக் அப்துல்லா கிளம்பிவிட்டார்.

இந்நிலையில் ஜமாத் முக்கியஸ்தர்கள், இரு தரப்பினரையும் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ரிஸ்வானா பேகம், கணவர் ஷேக் அப்துல்லா, அவரது தந்தை முகமது மீரான், தாய் மகபூப் பீவி உள்ளிட்ட 6 பேர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

6பேர் மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
6பேர் மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

இரு தரப்பினரையும் அழைத்து வைத்து விசாரணை செய்த போலீஸார், அதை உறுதிசெய்தனர். புகாரின் பேரில் ஷேக் அப்துல்லா மற்றும் குடும்பத்தினர்மீது முத்தலாக் தடைச்சட்டம் உட்பட, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.