'நடிகர்கள் ஏனோ உடல் நலனை கவனிப்பதில்லை!' | Kalabhavan Mani death: Police register Malayalam actor death as unnatural

வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (07/03/2016)

கடைசி தொடர்பு:16:30 (07/03/2016)

'நடிகர்கள் ஏனோ உடல் நலனை கவனிப்பதில்லை!'

புகழ்பெற்ற மலையாள நடிகரான கலாபவன் மணி கேரளாவில் சாலக்குடியில் வசித்து வந்தார். இவரது  வீட்டிலிருந்து கொஞ்ச தொலைவில் ஆறு ஒன்று ஓடுகிறது. இந்த ஆற்றங்கரையோரம் குடில் அமைக்கப்பட்டு, அதில்தான் மணி தனது நண்பர்களுடன் பொழுதை கழிப்பது வழக்கம். அப்படித்தான் நேற்று முன்தினமும் மணி இந்த குடிலில் மயங்கிக் கிடந்திருக்கிறார். அதிக அளவு மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே ரத்த வாந்தி எடுத்துள்ளார். கலாபவன் மணி 45 வயதில் மரணமடைந்ததற்கு தொடர்ந்து அதிகளவு மது அருந்தி வந்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது. தற்போது அந்த குடில்,  அதன் சுற்று வட்டாரப் பகுதியில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது உறவினர்கள் உள்பட 5 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மலையாள திரையுலகில்  அதிக மது பழக்கம் காரணமாக நடிகர்கள் மரணமடைவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கினறது.

மணியின் மரணம் குறித்து  விகடன் இணையதளத்தில் வாசகர்கள் வருத்தமுடன் செய்த பதிவுகள் இங்கே...

சிரித்துக்கொண்டே ஒரு வில்லனை ரசிக்கலாம்னா அது கலாபவன் மணியை மட்டுமே! நகைச்சுவையாகவே வில்லன் வேடத்தில் கலக்கும் ஒப்பற்ற கலைஞன், திடகாத்திரமான உடலமைப்பு கொண்ட இந்த மனிதன் நோயுடன் போராடி மரணமானார் என்பது  அதிர்ச்சி தரும் நம்பமுடியாத செய்தி! அஞ்சலிகள் அந்த பன்முக கலைஞனுக்கு!

- ஜெகதீஷ்

அடப்பாவமே, ஜீரணிக்கமுடியாத செய்தி, நடிப்பில் நகைச்சுவை வில்லன் குணசித்திரம், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்னு சகல துறைகளிலும் கைதேர்ந்த கலைஞன் அவர், என்னாச்சு? கடந்த இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக கலை துறையை சேர்ந்த பலர் தொடர்ச்சியாக காலமாவது வேதனையான ஒன்று, அஞ்சலிகள் அந்த மகா கலைஞனுக்கு!

- கலையரசன்

நம்ப முடியாத அதிர்ச்சி அளிக்கும் செய்தி, ஆழ்ந்த இரங்கல். மிகச் சிறந்த திறமையான நடிகர்...மலையாள திரை உலகிற்கு இது பேரிழப்பு.....உண்மையிலேயே பேரதிர்ச்சியாகவே இருக்கிறது...

- ராஜா கோமஸ்

மிகுந்த வருந்ததக்க செய்தி. கலாபவன்மணி முன்பு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றியவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பின் கலாபவனில் இணைந்து பல கலைகளை கற்று மிகச் சிறந்த நடிகராக திரை உலகில் பிரகாசித்தவர் இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்றால் உண்மையாகவே ஜீரணிக்க முடியவில்லை. நடிகர்கள் ஒரு விசயத்தை தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று, நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் நீங்கள்,  ஏனோ உங்கள் உடல் நலனை கவனிப்பதில்லை

-சுரேஷ்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்