சிவா அய்யாத்துரைக்கு இமெயில் கண்டுபிடித்ததற்கான அங்கீகாரம் மறுக்கப்படுவது ஏன்? | I'm the low-caste, dark-skinned, Indian, who DID invent - Dr. Shiva Ayyadurai

வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (09/03/2016)

கடைசி தொடர்பு:13:44 (09/03/2016)

சிவா அய்யாத்துரைக்கு இமெயில் கண்டுபிடித்ததற்கான அங்கீகாரம் மறுக்கப்படுவது ஏன்?

ன துவேஷம் காரணமாக இமெயிலை கண்டுபிடித்தது வேறு ஒருவர் என செய்தி பரப்பப்படுவதாக தமிழகத்தை சேர்ந்த சிவா அய்யாத்துரை வேதனை தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் அமெரிக்காவை சேர்ந்த ரோமாண்ட் டாம்லின்சன் மரணமடைந்தார். இதையடுத்து அமெரிக்க பத்திரிகைகளான நியூயார்க்  டைம்ஸ், தி கார்டியன், ஃபார்ச்சூன் இதழ்கள் இமெயிலை கண்டுபிடித்தவர் மரணம் என்று செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இது குறித்து தமிழரான சிவா அய்யாத்துரை வேதனை தெரிவித்துள்ளார்.

இமெயிலை கண்டுபிடித்த அங்கீகாரம், கவுரவம் தனக்கு சொந்தமானது என்று அமெரிக்காவில் வாழும் தமிழர் சிவா அய்யாதுரை உரிமை கோரியுள்ளார். இ-மெயிலுக்கான காப்புரிமையும் அவரிடமே உள்ளது. இது  குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது.

"என்னுடைய 14-வது வயதில் மின்னஞ்சலுக்கான மென் பொருளை உருவாக்கினேன். அதற்கு இ-மெயில் என்று பெயர் சூட்டினேன். அதற்கு முன்பு ஒரு கணினிக்கும் இன்னொரு கணினிக்கும் நேரடி இணைப்பின் மூலம் தகவல் அனுப்பும் சேவை இருந்தது. அதில் வெறும் வார்த்தைகளை (டெக்ஸ்ட் மெசேஜ்) மட்டுமே அனுப்ப முடியும். அதைதான் ரேமண்ட் கண்டுபிடித்தார். நான்தான் முதன்முதலில் கணினி மூலம் தகவல்களை அனுப்பும் மென்பொருளை உருவாக்கினேன்.

நான் கண்டுபிடித்த இ-மெயில், டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. இ-மெயிலில் உள்ள இன் பாக்ஸ், அவுட்பாக்ஸ், சிசி, பிசிசி, டேட்டா, பார்வர்டு, ரிப்ளை உட்பட அனைத்தையும் இன்னும் இமெயிலில் உள்ள பல விஷயங்களையும் நான்தான் உருவாக்கினேன். அதற்கான காப்புரிமையை கடந்த 1982-ம் ஆண்டு வாங்கினேன். ஆனால் இன்னும் அதற்கான  அங்கீகாரம் எனக்கு  முழுமையாக கிட்டவில்லை.  நான் இந்தியன், கருப்பு நிறத்தவன், புலம் பெயர்ந்தவன் என்பதுதான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இது நிச்சயமான உண்மை, நீதியின் தினம். உண்மைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்" எனக் கூறியுள்ளார்.

சிவா அய்யாதுரைக்கு ஆதரவாக பலர் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். சிவா அய்யாதுரையின் தந்தை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்தவர்.  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி இவரது தாயாரின் சொந்த ஊர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்