Published:Updated:

`கரூர் மக்களை மறக்க முடியாது; வலியோடு செல்கிறோம்!' -உணர்ச்சிவசப்பட்ட 604 வடமாநில தொழிலாளர்கள்

பீகாருக்குச் செல்லும் தொழிலாளர்கள்
பீகாருக்குச் செல்லும் தொழிலாளர்கள் ( நா.ராஜமுருகன் )

`கரூர் எங்களுக்கு இத்தனை நாள் சோறு போட்டது; வேலை கொடுத்து, சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது; கரூர் மக்களை எங்களால் மறக்கவே முடியாது. நாங்கள் கரூரைவிட்டு மனசு முழுக்க வலியோடு செல்கிறோம்.'

கரூர் மாவட்டத்தில் உள்ள, பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களில் சொந்த மாநிலத்துக்குச் செல்ல விருப்பம் உள்ளவர்களை, வழியனுப்பிவைக்கும் முயற்சியை கரூர் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்த வகையில், பீகார் மாநிலத்தைச் சேந்த 604 தொழிலாளர்களை, 16 பேருந்துகளின் மூலம் நாமக்கல் மாவட்ட ரயில் நிலையத்துக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், புகளுர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.

`கரூர் எங்களுக்கு இன்னொரு வீடு; திரும்பி வருவோம்!’ - உ.பி அனுப்பி வைக்கப்பட்ட 254 தொழிலாளர்கள்
பீகாருக்குச் செல்லும் தொழிலாளர்கள்
பீகாருக்குச் செல்லும் தொழிலாளர்கள்
நா.ராஜமுருகன்

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள பிற மாநிலத் தொழிலாளர்களில், அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் உள்ளவர்களை அனுப்பிவைக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டத்தில் 14 மாநிலங்களைச் சேர்ந்த 7,779 நபர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களில் முதற்கட்டமாக கரூர் மாவட்டத்தில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 254 நபர்களை, திருச்சியிலிருந்து ரயிலின் மூலம் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு கடந்த 17-ம் தேதி அனுப்பி வைத்தனர்.

பீகாருக்குச் செல்லும் தொழிலாளர்கள்
பீகாருக்குச் செல்லும் தொழிலாளர்கள்
நா.ராஜமுருகன்

பின்னர், கடந்த 19-ம் தேதி, கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 35 தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இராஜேந்திரன் வழியனுப்பிவைத்தார். அதன் தொடர்ச்சியாக, புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து, 16 பேருந்துகளின் மூலம், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 604 தொழிலாளர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதனடிப்படையில், அனைத்து தொழிலாளர்களையும் சமூக விலகலுடன் நிற்கவைத்து, அனைவரது கைகளிலும் சுத்தம் செய்யும் திரவம் தெளித்து, முகக்கவசங்கள் வழங்கி, கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காக வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த பின்னர், பாதுகாப்பாக 16 பேருந்துகளின் மூலம் நாமக்கல் ரயில் நிலையத்துக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.

பீகாருக்குச் செல்லும் தொழிலாளர்கள்
பீகாருக்குச் செல்லும் தொழிலாளர்கள்
நா.ராஜமுருகன்

அப்படி வழியனுப்பி வைக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில், ``கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், எங்கள் அனைவரையும் பாதுகாப்பாக தங்க வைத்து, நல்ல உணவும் அளித்து தற்போது எங்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் நன்றி. கரூர் எங்களுக்கு இத்தனை நாள் சோறு போட்டது; வேலை கொடுத்து, சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது; கரூர் மக்களை எங்களால் மறக்கவே முடியாது. நாங்கள் கரூரைவிட்டு மனசு முழுக்க வலியோடு செல்கிறோம்" என்று உருக்கமாகப் பேசினர்.

அடுத்த கட்டுரைக்கு