வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (13/03/2016)

கடைசி தொடர்பு:15:04 (14/03/2016)

அதிமுக கூட்டணியில் 7 கட்சிகள்:தொகுதிகள் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடக்கம்!

சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள 7 கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.விரைவில் தங்களுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள,

பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுசெயலர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூது, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் , தமிழக வாழ்வுரிமைக்  கட்சி வேல்முருகன் , இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், கொங்கு பேரவை கட்சி தனியரசு, சரத்குமார் கட்சியில் இருந்து பிரிந்த எர்ணாவூர் நாராயணன், ஆகியோர், ஜெயலலிதாவுடன் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், மக்களிடம் செய்யவுள்ள  பிரசார வியூகம், மற்றும் தொகுதிப்  பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகக்  கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலர் தேவராஜன், " "தமிழக அரசு பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக ஜெ அரசு உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார பணியில் எங்கள் கட்சியின் குழு செயல்படும். வரும் தேர்தலில் கூடுதல் சீட் வழங்க வேண்டும் என ஜெயலலிதாவிடம் வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து மாநில பார்வர்டு பிளாக் கட்சியின் பொது செயலர் கதிரவன் கூறுகையில்,
"ஜெயலலிதாவைச் சந்தித்தோம். எங்களின் ஆதரவை தெரிவித்தோம். அதிமுக வெற்றிக்கு உறுதியாக இருப்போம் என்று உறுதி அளித்துள்ளோம். தொகுதி அதிகம் தர வேண்டும் என்று  கோரியுள்ளோம். மீண்டும் ஜெயலலிதா முதல்வராவார் என்பதை தெரிவித்துக்  கொள்கிறேன்." என்றார்.

அதே போல, இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன்,இந்திய தவ்கீத் ஜமாஅத் தலைவர் பார்க்கர்,கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு ஆகியோரும் அதிமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்