சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி

சென்னை: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக எஸ்.முத்துச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பசாமி மறைந்ததால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், அந்தத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் எஸ்.முத்துச்செல்வி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்தது.

சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக உள்ள முத்துச்செல்வி, முன்னாள் எம்.எல்.ஏ., சங்கரலிங்கத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!