காங். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: உதகை வேட்பாளர் மாற்றம்! | Congress release the final candidates list

வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (22/04/2016)

கடைசி தொடர்பு:21:03 (22/04/2016)

காங். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: உதகை வேட்பாளர் மாற்றம்!

சென்னை: காங்கிரஸ் இறுதி வேட்பாளர் இன்று (22-ம் தேதி) வெளியிடப்பட்டது. அதேநேரத்தில் உதகமண்டலம் வேட்பாளரும் மாற்றப்பட்டுள்ளார்.

தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில், அந்த கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் 33 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை ஏற்கனவே, அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று (22-ம் தேதி) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

மயிலாப்பூர் - கராத்தே தியாகராஜன்
செய்யாறு - விஷ்ணுபிரசாத்
கிள்ளியூர் - ராஜேஷ்
காங்கேயம் - கோபி

ஸ்ரீபெரும்புதூர் - செல்லப்பெருந்தகை
மதுரவாயல் - நா.சே.ராஜேஷ்
ஸ்ரீவைகுண்டம் - ராணி வெங்கடேசன்
சிவகாசி - ராஜா சொக்கர்

மேலும், உதகமண்டலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கணேஷுக்கு பதிலாக ராமச்சந்திரனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்