ஜெயலலிதா வெற்றி... திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றிய நமீதா! (வீடியோ) | Jayalalitha victory... Namita went to Tirupathi (Video)

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (23/05/2016)

கடைசி தொடர்பு:15:36 (23/05/2016)

ஜெயலலிதா வெற்றி... திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றிய நமீதா! (வீடியோ)

திருமலை: அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து, நடிகை நமீதா திருப்பதியில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார்.

பிரபல திரைப்பட நடிகை நமீதா, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் நமீதா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்.அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நமீதா, இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் நேற்று குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடித்துவிட்டு கோயிலை விட்டு வெளியே வந்த நமீதாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களை பார்த்து நமீதா இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.


அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய நலத்திட்டங்களால் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது நல்லாட்சி தொடர்வதற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என நான் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருந்தேன். எனது வேண்டுதலை ஏழுமலையான் நிறைவேற்றி உள்ளார். தற்போது, எனது பிரார்த்தனை நிறைவேறியதை தொடர்ந்து, ஏழுமலையானை தரிசித்து நன்றி சொல்லவே இங்கு எனது குடும்பத்துடன் வந்துள்ளேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்