வெளியிடப்பட்ட நேரம்: 07:58 (30/06/2016)

கடைசி தொடர்பு:12:46 (30/06/2016)

64வது முறையாக உடைந்தது சென்னை விமான நிலைய கண்ணாடி

சென்னை விமான நிலையத்தின் கண்ணாடி கதவு 64வது முறையாக உடைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு, மேற்கூரை இடிந்து விழுவது வழக்கமாகிவிட்டது.

இதுவரை 21 முறை தடுப்பு கண்ணாடி மற்றும் மேற்கூரை தலா 21 முறையும், கதவுகள் 20 முறையும், 5 முறை சுவரின் பகுதிகளும் இடிந்து  விழுந்துள்ளன.

இதுவரை இந்த சம்பவத்தால் மட்டும் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த முறை நுழைவுப் பகுதியில் உள்ள பணப்பரிமாற்றம் செய்யும் இடத்தில் உள்ள 8 அடி கதவு உடைந்து விழுந்துள்ளது. 64வது முறையாக சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விமான நிலைய ஊழியர்கள் மூலம் கண்ணாடியை அப்புறப்படுத்திய விமான நிலைய அதிகாரிகள், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், பயணிகளின் ட்ராலி இடித்து கதவு உடைந்திருக்கலாம் என்றும் கூறினர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்