நீர்வரத்து அதிகரிப்பு! குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

திருநெல்வேலி: குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு விழுவதால் பாதுகாப்புக் கருதி, அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக கேரளாவில் மழை பெய்யும்போது, குற்றால மலைப்பகுதிகளிலும் மழைப்பொழிவு இருக்கும்.

அத்துடன் குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் சாரல் மழையுடன் இதமான சூழல் இருக்கும் என்பதால், நாட்டின் பல்வேறு இடங்களிலும் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து கிடக்கும் நிலையில் குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

காடுகளில் உள்ள காய்ந்த மரங்கள், பாறைகள் போன்றவை தண்ணீருடன் உருட்டி வரப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!