Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தி.மு.க.வினரோடு சேர்ந்து துரோகம்!' - சசிகலா புஷ்பாவை விளாசிய நாஞ்சில் சம்பத்!

சிகலா புஷ்பா விவகாரம் பரபரப்பை கிளப்பிய நேற்று, மதுரையில் அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் கட்சியினரிடம் இருந்தது. மாலை வரை உறுதி செய்யப்படாத நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு, 'சென்னையிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன்' என்று தகவல் சொன்ன பிறகு, கூட்டம் உறுதி செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் சிறப்பு பேச்சாளர் நாஞ்சில் சம்பத், எட்டு மணிக்கே மேடைக்கு வந்துவிட்டாலும், அமைச்சர் வந்த பின்புதான் பேச முடியும் என்பதால், உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரின் பேச்சை, பொதுமக்களைப் போலவே தாங்க முடியாமல் கேட்டுக் கொண்டிருந்தார். ஒருவழியாக ஒன்பது முப்பதுக்கு அமைச்சர் வந்து, ரெண்டு வார்த்தை பேசிவிட்டு கிளம்பியதும், நாஞ்சில் சம்பத் கடுப்போடு மைக் பிடித்தார்.

அப்போது, பட்ஜெட்டில் உள்ள சில முக்கியத் திட்டங்களை விளக்கி பாராட்டிப் பேசியவர், அடுத்து சசிகலா புஷ்பா மேட்டருக்கு வந்தார். ''சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் இரண்டு பேர் உடற்பயிற்சி செய்கிற படம் வந்ததை சிலர், என்னிடம் காட்டினார்கள். அப்போதே அம்மா நடவடிக்கை எடுத்து விட்டார்.

 

தற்போது சசிகலா புஷ்பா, தி.மு.க.வினரோடு சேர்ந்து திட்டமிட்டு கழகத்தை காட்டிக் கொடுக்கும் துரோகத்தை செய்திருக்கிறார். அவரால் நம் கழகத்தை ஒன்றும் செய்ய முடியாது.

திருச்சி சிவாவுடன் அவர் நடந்து கொண்ட விதத்தால், அம்மாவை குறை சொல்ல அவருக்கென்ன தகுதி இருக்கு? அவருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர் அம்மா. சசிகலா புஷ்பாவை நீக்கியதற்கு நம் அம்மா பதில் சொல்லணும்னு ஸ்டாலின் சொல்றது வேடிக்கையாக இருக்கு" என்று ஒரு பிடி பிடித்துவிட்டு அடுத்த சப்ஜெக்ட்டுக்கு போனார்.

- செ.சல்மான்
படங்கள்: வீ.சதீஷ்குமார்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement