Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அமைச்சர்கள் உறுதி: போராட்டத்தை கைவிட்டார்கள் ராமேஸ்வரம் மீனவர்கள்!

ராமேஸ்வரம்: மத்திய அமைச்சர்களின் உறுதியை தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற மீனவர்களையும், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும், பாரம்பரிய பகுதிகளில் பிரச்னை இன்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இதனை வலியுறுத்தி கடந்த 26-ம் தேதி அவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ராதா மோகன்சிங், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில் தமிழக மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இம்மாதத்திற்குள் (ஆகஸ்ட்) இலங்கை அரசுடன் பேசி, படகுகளை மீட்க நடவடிக்கை எடுப்பதாகவும், பாரம்பரிய பகுதிகளில் பிரச்னை இன்றி மீன்பிடிக்க இலங்கை மீனவர்களுடனான 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் மத்திய அமைச்சர்கள் உறுதியளித்தனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர்களின் உறுதியை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள், தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள்,  இன்று காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

- இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close