Published:Updated:

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழுக் கொள்ளளவை எட்டிய 67 ஏரிகள்!

வீராணம் ஏரி

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல ஏரிகள் வேகமாக நிரம்பிவருவதாக பொதுப்பணித்துறை தெரிவித்திருக்கிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழுக் கொள்ளளவை எட்டிய 67 ஏரிகள்!

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல ஏரிகள் வேகமாக நிரம்பிவருவதாக பொதுப்பணித்துறை தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
வீராணம் ஏரி

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றுதொட்டு இன்றுவரை பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

தொடர் மழையின் காரணமாகச் சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 600 மில்லியன் கன அடி நீர் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் இருக்கின்றன. இதில், காஞ்சிபுரத்திலுள்ள 13 ஏரிகளும், செங்கல்பட்டிலுள்ள 54 ஏரிகளும் என மொத்தம் 67 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியிருப்பதாகப் பொதுப்பணித்துறை தெரிவித்திருக்கிறது.

மேலும், 125 ஏரிகள் 75 சதவிகிதமும், 206 ஏரிகள் 50 சதவிகிதமும், 125 ஏரிகள் 25 சதவிகிதமும் மற்றும் 324 ஏரிகளில் 25 சதவிகிதத்துக்கும் குறைவாகவும் நீர் நிரம்பியிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் நான்கு ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை எனவும் பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism