Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உமா மகேஸ்வரி கொலை வழக்கு... 3 பேரின் ஆயுள் தண்டனை உறுதி!

சென்னை: சென்னையை அடுத்த சிறுசேரியில், ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சென்னையை அடுத்த சிறுசேரியில், 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கடத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

மேலும், உயிரிழந்த உமா மகேஸ்வரி குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சத்தை 4 மாதத்தில் அளிக்க வேண்டும் என்றும், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதை எதிர்த்து உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகிய மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து 3 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement