வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (01/09/2016)

கடைசி தொடர்பு:09:39 (01/09/2016)

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர்...யார் இவர்? #1 min read

 

விடை பெற்றுவிட்டார் ரோசையா. ஐந்து ஆண்டுகாலம் தமிழக கவர்னர் பதவியை அலங்கரித்த ரோசையா இன்றுடன் (புதன்கிழமை) விடை பெற்றுவிட்டார். 2011ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார் ரோசையா. அதற்குப் பிறகு பி.ஜே.பி அரசு பொறுப்பேற்றபோது பல கவர்னர்கள் மாற்றப்பட்டார்கள். ஆனால், ரோசையா மட்டும் மாற்றப்படவில்லை. அதிமுக அரசசுடன் இணக்கமாக இருந்தது தான் அதற்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.

தற்போது அவரது பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து கவர்னராக யாரை குடியரசுத் தலைவர் நியமிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி நேற்று பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், மகாராஷ்ட்ரா மாநில கவர்னரான வித்யாசாகர் ராவ் தமிழகத்திற்கான கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

யார் இந்த வித்யாசாகர் ராவ்? :

1942ல் தற்போதைய தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கரீம் நகரில் பிறந்தவர் வித்யாசாகர் ராவ். பிரபலமான உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்த இவர், படிக்கும்போது மாணவர் சங்கத் தலைவராக இருந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஜன சங்கத்தில் உறுப்பினராக இருந்த இவர், எமெர்ஜென்ஸி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு 1985ல் இருந்து 1998 வரை மேட்பள்ளி தொகுதியில் இருந்து ஆந்திர சட்டசபைக்கு பி.ஜே.பி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின்னர் பி.ஜே.பி.,யின் தலைவராகவும் இருந்தார். மக்களவை தேர்தலில் போட்டியிட்டு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் உள்விவகாரத்துறை இணை அமைச்சராகவும், வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இவரது அண்ணன் ராஜசேகர ராவ் ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவராக இருந்தவர். இன்னொரு அண்ணன் ஹனுமந்த ராவ் மத்திய ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்தார்.

2014ல் மகாராஷ்ட்ரா கவர்னராக நியமிக்கப்பட்டார் வித்யாசாகர் ராவ். தற்போது தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

- மோகன் பிரபாகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்