Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அமைச்சர்..!

ஜெயலலிதாவின் கோபக்கனல் சுட்டு, அ.தி.மு.க.வில் எத்தனையோ எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் எரிந்து போய் இருக்கிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட ஜெயலலிதா...வாய்விட்டு, வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஒருவர் உண்டென்றால், அவர்தான் திண்டுக்கல் சீனிவாசன். அவர், முன்னாள் அ.தி.மு.க பொருளாளர், இந்நாள் வனத்துறை அமைச்சர்.

ஜெயலலிதா,  சசிகலா...இருவரும் அரசியல் பிஸியான நேரத்தில், சற்று டென்ஷனாக இருப்பார்கள். அந்த நேரத்தில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கார்டனில் இருந்து அழைப்பு வருமாம். இவரும் உடனே போவாராம். எந்த சப்ஜெக்ட்டைப் பற்றி 'லீட்' எடுத்துக் கொடுத்தாலும்...காமெடி கலந்து ஆரம்பித்துவிடுவாராம். பெரியம்மாவையும், சின்னம்மாவையும் ஆனந்த கண்ணீர் தழும்பும் அளவிற்கு சிரிக்க வைப்பாராம்.

அ.தி.மு.க.வின் பொருளாளர் பதவியில்  சீனிவாசன் இருந்தநேரத்தில், அடிக்கடி போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடம் கட்சி நிர்வாகிகள் குறித்தும், சினிமாவில் நடக்கும் சங்கதிகள் குறித்தும் கலகலப்பாக பேசுவது வழக்கம். இப்படித்தான்...ஒருமுறை சிட்லபாக்கம் ராஜேந்திரன் மீது கடுங்கோபத்தில் இருந்த ஜெயலலிதா, அவரை கட்சியை விட்டு கட்டம் கட்ட முடிவு செய்திருந்தாராம். நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைக்கு இதற்கான அறிவிப்பு அனுப்ப ரெடியாக இருந்தாராம் ஜெயலலிதா.

அப்போது கார்டனுக்கு போயிருந்தாராம் சீனிவாசன். 'ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப் போறேன். நீங்க என்ன சொல்றீங்க சீனீவாசன்?' என்று ஜெயலலிதா கேள்வி கேட்டாராம்.  'அதுக்கென்னம்மா தாராளமா செய்யுங்க. இது உங்க கட்சி, நீங்களா பார்த்து போட்ட பிச்சை தான் கட்சி பதவி. மகராசி... உங்களுக்கு பிடிக்கலன்னா எவனா இருந்த என்ன தூக்கி எறிய வேண்டியதுதானே தாயீ. உங்க விளக்கு வெளிச்சத்துல வாழுற விட்டில் பூச்சிங்க நாங்க..' என்று சினிவாசன் சீரியஸக பேசப்பேச சிரிப்பு தாங்க முடியாத ஜெயலலிதா, கோப 'மூட்' மாறி சகஜநிலைக்கு திரும்பினாராம். ராஜேந்திரன் மீது எடுக்க இருந்த நடவடிக்கையை தவிர்த்திருக்கிறார்.

ஆனால், துரதிஷ்டம் வேறு வடிவில் வந்தது. பொருளாளராக இருந்தபோது ஒருமுறை, தனது மகனை அழைத்துச் சென்று ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்திருக்கிறார் சீனிவாசன். அவர் மகனை ஏறிட்டுப் பார்த்த ஜெயலலிதா, 'பையன் நல்லா இருக்கானே... என்ன பிசினஸ் செய்யப் போறான்" என்று கேட்டிருக்கிறார். 'ஒண்ணுமில்லம்மா சினிமாவுல ஹீரோவா நடிக்கணும்னு ஆசைப்படுறான்' என்று தலையை சொறிந்தவாறே கூச்சத்துடன் சீனிவாசன் சொல்ல,

வாழ்த்தி அனுப்பியிருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தை பயன்டுத்திக்கொண்ட சீனிவாசனின் எதிர்கோஷ்டியினர், 'தன் மகனை நடிப்பில் இன்னொரு எம்.ஜி.ஆராக ஆக்குவேன் என்று சவால் விட்டுத் திரிகிறார்' என்று கொளுத்திப்போட்டிருக்கிறார்கள். இது போயஸ்கார்டன் வரை எட்டியதாம். அதே நேரத்தில் வேறு சில கட்சி விஷயங்களில் சீனிவாசன் மீது ஜெயலலிதாவுக்கு வெறுப்பு வரத்துவங்கியிருக்கிறது. அதே காலகட்டத்தில், வேறு வேலை காரணமமாக போயஸ் கார்டனுக்கு போய்விட்டு, அவரது வீட்டுக்கு கிளம்பியிருக்கிறார். இவர் வீடு போய் சேருவதற்குள் அ.தி.மு.க பொருளாளர் பதவி பறிப்பு செய்தி வெளியானது. அதன்பின், கடந்த பல வருடங்களாக.. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நத்தம் விஸ்வநாதனுக்கு அடித்தது சான்ஸ். சீனிவாசனுக்கு பதில் அ.தி.மு.க-வில் நம்பிக்கை நடசத்திரமாக திகழ்ந்தார் விஸ்வநாதன். வேறு வழியில்லாமல், விஸ்வநாதனுக்கு முறைவாசல் செய்தபடி, அ.தி.மு.க.வில் செல்லாக் காசாய் இருந்து வந்தார் சீனிவாசன். இந்த நிலையில், கடந்த அ.தி.மு.கழக ஆட்சியின் இறுதியில் விஸ்வநாதனுக்கு இறங்குமுகம் ஆரம்பித்தது. ஜெயலலிதாவின் கோபப் பார்வைக்கு ஆளானார். அப்போதுதான், சீனிவாசன் அரசியல் வாழ்க்கையில் வசந்தம் துளிர்விட்டது. எம்.எல்.ஏ சீட்டை தந்தார் ஜெயலலிதா. தேர்தலில் ஜெயித்ததும், தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில், திண்டுக்கல் சீனிவாசனுக்கு வனத்துறை அமைச்சர் பதவியும் கொடுத்தார் ஜெயலலிதா.


தனது நன்றியை வெளிப்படுத்தும் விதமாக, போயஸ் கார்டனுக்கு நன்றி கூறச் சென்றார் சீனிவாசன். அப்போது, 'என்ன சீனிவாசன் சந்தோஷம் தானே... வாழ்த்துக்கள். போய் வேலையை பாருங்கள்...' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று இருக்கிறார் ஜெயலலிதா. அதன் பின், அரைமணி நேரம் கழித்து வந்த ஜெயலலிதா, சீனிவாசன் அங்கேயே நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, 'என்ன சீனிவாசன் உங்களைத்தான் அப்பவே போகச் சொல்லிட்டேனே இன்னும் ஏன் நிக்கிறீங்க' என்று கேட்க, 'ஒண்ணுமில்லம்மா ஒருதடவை பொருளாளர் பதவியை வீடுபோய் சேர்றதுக்குள்ளே பறிச்சீட்டிங்க. இப்போ வீடுபோய் சேர்றதுக்குள்ளே அமைச்சர் பதவியை பறிச்சா மானம் போயிடும். அதனால் கன்ஃபார்ம் பண்ணிக்க காத்துக்கிட்டு இருக்கேன்ம்மா' என்று காலில் விழுந்து சொல்ல, கலகலவென சிரித்து இருக்கிறார் ஜெயலலிதா.

- சத்யாபதி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement