Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ அம்மா மனது வைத்தால்....!’  -உறவுகளிடம் மனம் திறந்த சசிகலா

இளவரசி மகன் விவேக் திருமண ஆல்பம்... புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ விவேக் ஜெயராமனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நிறைவடைந்துவிட்டது. ' வரவேற்பு மேடையில் வைத்தே மன்னார்குடி உறவுகளுக்கு விரிவான பாடம் எடுத்தார் சசிகலா' என்கின்றனர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அ.தி.மு.கவினர். 

சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக் திருமணம், கடந்த 29-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ' தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்...' என அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டிருந்தாலும், விவேக் திருமணத்திற்கு முதல்வர் வரவில்லை. ' முதல்வர் பங்கெடுக்காமல் போனதற்குப் பின்னால் பெண் வீட்டார் குறித்த சில செய்திகள்தான்' என்பதை பரவலாக கட்சிக்காரர்கள் உணர்ந்து வைத்துள்ளனர். அனைத்து சிரமங்களையும் தாண்டி வெகுவிமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது. ஆனால், திருமண மண்டபம் முதல் வரவேற்பு நடந்த மகாராஜா மண்டபம் வரையில் திவாகரன் முகத்தில் எந்தக் கலகலப்பும் இல்லை. அண்ணன் மகன் திருமணம் என்பதால் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார். கடந்த 2-ம் தேதி மன்னார்குடியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், திவாகரன் மகன் ஜெயானந்த் சார்பில், முதல்வரின் படம் போட்டு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். 

இளவரசி மகன் விவேக் திருமண ஆல்பம்... புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

திருமண வரவேற்பில் சசிகலாவின் உறவுகள் அனைவரும் கூடியிருந்தனர். நடராஜனோடு பழ.நெடுமாறனும் மேடையேறியதை ஆச்சரியத்தோடு கவனித்தனர் மன்னார்குடி வாரிசுகள். " தொடக்கத்தில் இருந்தே சசிகலா, இளவரசி, திவாகரன் உள்ளிட்டவர்களுக்கு இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லையென்றாலும், விவேக்கின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட அவர்கள் விரும்பவில்லை. விவேக்கின் பின்னால் இருந்து இயக்கியவர்கள், அவரது மாமன்களான கண்ணதாசன், வடுகநாதன், அண்ணாதுரை ஆகியோர்தான். ' திருமணம் தொடர்பாக, முதல்வரின் கவனத்திற்கு சில குறிப்புகள் சென்றிருக்கிறது' என மன்னார்குடி உறவுகளிடம் நேரடியாகவே தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இதை மன்னார்குடியின் பெரும்பாலான உறவுகள் ரசிக்கவில்லை" என விவரித்த, மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்,

நம்மிடம், " 2012-ம் ஆண்டு திவாகரன் மகள் ராஜமாதங்கியின் திருமணத்திற்குக்கூட சசிகலா வரவில்லை. இடையில், நமது எம்.ஜி.ஆர் ஊழியர் ஒருவரின் தந்தை இறப்பிலேயே திவாகரனை சந்தித்தார் சசிகலா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக் திருமணத்திலேயே அனைவரும் ஒன்று கூடினர். அதிலும், விவேக்கின் திருமண நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு என மூன்று நிகழ்விலும் பங்கேற்றார் சசிகலா. 

தஞ்சாவூரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், ‘ மன்னார்குடி உறவுகளுக்கு ஏதேனும் உத்தரவு போடுவார் சசிகலா’ எனக் காத்திருந்தோம். மற்றவர்களும் அவர் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அப்போது கிடைத்த சிறிய இடைவெளியில், நெருங்கிய உறவுகள் சிலரிடம் பேசிய சசிகலா, ' யாரும் தேவையற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம். நீங்கள் அனைவரும் தேவையான அளவுக்கு செட்டில் ஆகிவிட்டீர்கள். இதற்கு மேலும் ஆட்சி அதிகாரத்திற்குள் நுழைந்து அம்மாவுக்குக் கெட்ட பெயர் உருவாக்கும் வேலைகளில் இறங்கக் கூடாது.

இளவரசி மகன் விவேக் திருமண ஆல்பம்... புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

 

இதனால் தேவையற்ற குழப்பம்தான் ஏற்படும். அம்மா மனது வைத்தால்தான் எதுவும் நடக்கும். நீங்கள் அனைவரும் பொறுமையாக இருந்துதான் ஆக வேண்டும்" என நீண்ட நேரம் விளக்கினார். இவ்வளவு பொறுமையாக அவர் பேசி நாங்கள் பார்த்ததில்லை. இதன்பிறகு ஒன்று கூடிய மன்னார்குடி உறவுகள் சிலர், ' சின்னம்மா சொல்வது உண்மைதான். நமக்கென்ன குறை இருக்கிறது? நேரம் வரும் வரையில் பொறுமையாக காத்திருப்போம்' எனப் பேசியுள்ளனர். வரவேற்பு விழாவோடு மன்னார்குடி உறவுகளுக்கு நீண்ட அறிவுரையும் வழங்கிவிட்டுச் சென்றுவிட்டார் சசிகலா" என்றார் விரிவாக. 

-ஆ.விஜயானந்த் 
படம்: உசேன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement