வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (30/09/2016)

கடைசி தொடர்பு:16:28 (30/09/2016)

முதல்வரைப் பற்றி வதந்தி பரப்பியவர்கள் இவர்கள்தான்..! சீறும் சி.ஆர்.சரஸ்வதி

சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா, காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதல்வரைப் பற்றி வதந்தி பரப்புபவர்கள் குறித்து அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி சில கேள்விகளை முன்வைத்தோம்.

முதல்வர் எப்படி இருக்கிறார்கள்?. 

நலமாக இருக்கிறார்கள். ஒரு பிரச்னையும் இல்லை. 

முதல்வர் உடல் நலம் குறித்து பரவும் வதந்திக்கு யார் காரணம்?

தேவையில்லாதவர்கள் வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலை இது. நல்ல விஷயத்தை சொல்லலாம். சட்டம், ஒழுங்கு பாதிக்க அவர்கள் செய்கிற வேலை. மருத்துவமனை நிர்வாகமே தெளிவாக முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக சொல்லி இருக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கிறார். ஜெயலலிதா உடல் நலம் குறித்து பரவும் தகவல்கள் முழுக்க, முழுக்க பொய். விரைவில் அவர், பூரண நலத்துடன், முழுபலத்துடன் வீட்டுக்கு வருவார்கள். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை சந்தித்தீர்களா? 

நாங்கள் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறோம். அவர்களைச் சும்மா, சும்மா சந்தித்து தொல்லைப்படுத்த விரும்பவில்லை. நலமாக இருக்கிறார்கள். முதல்வருக்கு ஒரு பிரச்னையும் இல்லை. டாக்டர்கள் அட்வைஸ் செய்து இருக்கிறார்கள். சாதாரணமாக காய்ச்சல் வந்தாலே ஒரு வாரம் நமக்கே பாதிப்பு இருக்கும். 

காய்ச்சல் தவிர வேறு எதுவும் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? 

சமூக வலைத்தளத்தில் சிகிச்சை தொடர்பாக ஆயிரம் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அது உண்மை அல்ல. முதல்வர் பூரண நலத்துடன் இருக்கிறார்கள். தொடர்ந்து அரசு வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. முதல்வரால் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளன. உள்ளாட்சி தேர்தல் வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.  

எஸ்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்