வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (07/10/2016)

கடைசி தொடர்பு:12:41 (07/10/2016)

சென்னையில்தான் மார்பகப் புற்றுநோய் அதிகம்! அதிர்ச்சித் தகவல்

        

சென்னை: சென்னையில் பெண்கள் மத்தியில் ஆண்டுக்காண்டு மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என்றும் அதனால் இளம்பெண்களின் இறப்பு விகிதம் கூடிவருகிறது என்றும் மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மெரினா காந்தி சிலை அருகில் இன்று (வெள்ளி) காலை மார்பகப்புற்று நோய் விழிப்பு உணர்வு பேரணி நடைபெற்றது.மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்பு உணர்வு பேரணியில் கல்லூரி மாணவியர், மருத்துவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.  

மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வு குறித்து பேரணியின்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த  டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன் கூறுகையில்," இது மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதம். மார்பகப் புற்றுநோய் குறித்து தமிழகப் பெண்களுக்கு விழிப்பு உணர்வு போதிய அளவில் இல்லை.இன்றைக்கு சென்னைப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்  பாதிப்பு அதிகரித்துள்ளது.நிறைய பேருக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது.இந்திய அளவில் 28% பேர் சென்னையில்தான் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். மார்பகப் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகிய  பெண்களில் 67% பேர் இறந்துவிடுகின்றனர்.அதனால் மார்பகப்புற்று நோய் குறித்து முன்னெச்சரிக்கை விழிப்பு உணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்.

         

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குத்தான்  மார்பகப் புற்று வரும்.ஆனால் இப்போது 30 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குத்தான் அதிக அளவில் இந்த கேன்சர் வருகிறது. இதனால் பெண்கள் அவதிப்படுகின்றனர்." என்று தெரிவித்தார்.


தேவராஜன்         

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்