இப்போது தமிழகத்திற்கு துணை முதல்வர் வேண்டுமா...? உங்கள் கருத்து என்ன..! #PeopleSurvey | Jayalalithaa's health- apollo's two page press release- what's the government has to do #PeopleSurvey

வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (07/10/2016)

கடைசி தொடர்பு:15:55 (11/03/2017)

இப்போது தமிழகத்திற்கு துணை முதல்வர் வேண்டுமா...? உங்கள் கருத்து என்ன..! #PeopleSurvey

முதல்வரின் உடல்நிலை குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம் கூறியது. ஆனால் விளக்கம் கேட்ட இரண்டாம் நாளிலேயே, அந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது.இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மூன்று டாக்டர்கள் குழு நேற்று சென்னை வந்து முதல்வரின் உடல்நிலையை பரிசோதித்த நிலையில், அப்போலோ மருத்துவமனை தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்தான இரண்டு பக்க அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் சுவாசக் கருவி உபயோகம், நெபுலைசர்கள், நுரையீரலில் இருக்கும் தொற்றுக்கு கழிவை அகற்ற மருந்துகள், நுண்ணுயிர் கொல்லி மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் செவிலியர்களின் பராமரிப்பில் முதல்வர் இருக்கிறார் என்றும். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் இந்த சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுறது என்றும், அதற்காக முதல்வர் நீண்ட காலம் (?) மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான உங்களின் கருத்துக்கள் என்ன?

1. முதல்வர் ஜெயலலிதா நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கி இருப்பார் என்று அப்போலோ அறிவித்துள்ள நிலையில் ஆட்சி, நிர்வாகப் பணிகளைக் கவனிக்க துணை முதலமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

 



-ஐஷ்வர்யா 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை