வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (13/10/2016)

கடைசி தொடர்பு:15:23 (13/10/2016)

அதிமுக கவுன்சிலர் கொலையில் 4 பேர் கைது

திருத்தணியில் அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். 13-வது வார்டு அதிமுக கவுன்சிலரான இவர், கடந்த 8-ம் தேதி திமுக ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில், கொலை வழக்கில் அஸார், பிரேம், ராஜேஷ், வடிவேலு ஆகியோரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க