சசிக்குமார் கொலையில் தொடர்புடையவர் படத்தை வெளியிட்டது சி.பி.சி.ஐ.டி | Cbcid released coimbatore hindu munnani sasikumar's murder intrested person sketch photo

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (14/10/2016)

கடைசி தொடர்பு:17:16 (14/10/2016)

சசிக்குமார் கொலையில் தொடர்புடையவர் படத்தை வெளியிட்டது சி.பி.சி.ஐ.டி

கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். இதனால் கோவையில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.  மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர் என்று ஒருவரது வரைபடத்தை சி.பி.சி.ஐ.டி இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்று சி.சி.டி.வி. கேமராவில் பதிவானவர்களது வீடியோவை சி.பி.சி.ஐ.டி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க