தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: பலர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் விவசாயிகளும், அனைத்து கட்சியினரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். சென்னை ரயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தை தடுக்க சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படம் : ஆ.முத்துக்குமார்

முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில்  ஏராளமான  திமுகவினர்  இன்று காலை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில்  குவிந்தனர்.  இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.  அத்துமீறி ரயில் நிலையத்துக்குள் நுழைந்த திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். படம் : தே.தீட்ஷித்

திருச்சி - நாகூர் பேசஞ்சர் ரயிலை மறித்தவர்கள் கைதாகினர். திருவாரூர், கோடிக்கால்பாளையத்தில் நடந்த ரயில் மறியலில் கலந்து கொண்டார் சிபிஐ முத்தரசன். படம்: ராம கிருஷ்ணன்

மேலும் கடலூர், விழுப்புரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடைபெறுகிறது.படம் : தே.தீட்ஷித்

தஞ்சாவூர் ரயில் மறியல் போராட்டத்தில் விவசயாய சங்கத்தினர் டிராக்கில் அமர்ந்து சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தினர். 

படம் : சீலன்

சிவகங்கை ராமேஸ்வம் எக்ஸ்பிரஸ்ரயில் மற்றும் மன்னார்குடி எக்ஸ்பிரஸ்ரயில் ஆகிய இரண்டு ரயில் அனைத்து கட்சியினையரை சேர்ந்து மறியலில் ஈடுபட்ட முயன்ற 1000க்கு மேற்பட்டோர் கைது. படம் : சாய் ரமேஷ்

இன்னும் சற்று நேரத்தில் சேலம் ஜங்ஷனில் அனைத்து சார்பாக இரயில் மறியல் நடைபெற இருப்பதால் அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. படம் : வீ.கே.ரமேஷ்

பொன்முடி தலைமையில் விழுப்புரத்தில் சோழன் எக்ஸ்பிரஸை மறித்து போராட்டம் நடத்தினர். படம் : அச்சனந்தி சதீஷ்

ஈரோட்டில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது. படம் : மாணிக்கவாசகம்

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. படம்: அரவிந்த்

அரியலூரில்,பெரம்பலூர் திமுக தொண்டர்கள் 11.30 மணியளவில் வரும் குருவாயூர் ரயிலை மறிக்க தயாராகும் திமுகவினர். ரயில்வே ஸ்டேசனுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு. படம்: திலீபன்

விருதுநகர் ரயில்வே ஸ்டேசனில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்த  விவசாய சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது. படம்: ஜெ.வி கார்த்தி

தேனி மாவட்டத்தில் ரயில் இல்லாததால் பஸ் மறியலில் ஈடுபட்ட கட்சியினர். படம்: சக்தி அருணகிரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!