Published:Updated:

`பி.வி.சிந்துவைத் திருமணம் செய்ய உதவுங்கள்!' - பெண் அதிகாரியிடம் அடம்பிடித்த ராமநாதபுர முதியவர்

குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்கும் மலைச்சாமி

மனுவை வாங்கியவுடன் மலைச்சாமியின் கையில் ஓர் உணவு பொட்டலத்தைக் கொடுத்து அங்கிருந்து அனுப்பிவிடுவார். அதற்குக் காரணம் அந்த மனுவில் இடம் பெற்றிருக்கும் வில்லங்கமான கோரிக்கைகள்தான்.

`பி.வி.சிந்துவைத் திருமணம் செய்ய உதவுங்கள்!' - பெண் அதிகாரியிடம் அடம்பிடித்த ராமநாதபுர முதியவர்

மனுவை வாங்கியவுடன் மலைச்சாமியின் கையில் ஓர் உணவு பொட்டலத்தைக் கொடுத்து அங்கிருந்து அனுப்பிவிடுவார். அதற்குக் காரணம் அந்த மனுவில் இடம் பெற்றிருக்கும் வில்லங்கமான கோரிக்கைகள்தான்.

Published:Updated:
குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்கும் மலைச்சாமி

வாழவழி கேட்டு வரிசையில் நின்று மனு கொடுக்கும் மனிதர்கள் மத்தியில் சிலர் கேளிக்கையாக மனு கொடுப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவைத் தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறார் 70 வயது முதியவர் ஒருவர்.

மலைச்சாமி
மலைச்சாமி
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது விரதக்குளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் மலைச்சாமி. வேடிக்கையாகவும் அதே நேரத்தில் வில்லங்கமாகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மலைச்சாமிக்கு திங்கள்கிழமை என்றாலே உற்சாகம் பிறந்து விடும். அதிகாலையிலேயே தனது கிராமமான விரதக்குளத்திற்கு வரும் முதல் பஸ்ஸைப் பிடித்து நேராக ராமநாதபுரம் வந்து இறங்கி விடுவார். அங்கிருந்து நடந்தோ அல்லது நகர்ப் பேருந்திலோ மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் ஆஜர் ஆகிவிடுவார். கண்ணில்படும் ஆட்சியர் அலுவலக ஊழியர்களிடம் எதையாவது கேட்டுக்கொண்டே நேரத்தைப் போக்குவார். சரியாக 11 மணி ஆகிவிட்டால் போதும் நேராக மக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்குள் நுழைந்துவிடுவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வரிசையில் நிற்கும் மற்ற மனுதாரர்களுடன் தானும் ஒருவராக கலந்து நின்று கொண்டிருக்கும் மலைச்சாமி, தனது முறை வந்தவுடன் தனது பையில் வைத்திருக்கும் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்து நீட்டுவார். மற்ற மனுக்களைப் போன்று மலைச்சாமியின் மனுவினை மாவட்ட ஆட்சியர் விலாவாரியாக விசாரிப்பதில்லை. மனுவை வாங்கியவுடன் அவரின் கையில் ஒரு உணவுப் பொட்டலத்தைக் கொடுத்து அங்கிருந்து அனுப்பி விடுவார். அதற்குக் காரணம் அந்த மனுவில் இடம் பெற்றிருக்கும் வில்லங்கமான கோரிக்கைதான்.

கோரிக்கையை விளக்கும் மலைச்சாமி.
கோரிக்கையை விளக்கும் மலைச்சாமி.

அந்த மனுவில் இடம் பிடித்திருக்கும் வில்லங்கமான கோரிக்கைகள் இதுதான். 70 வயதான மலைச்சாமி, தான் 2004-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி பிறந்ததாகவும் எனவே தனக்கு 16 வயது எனச் சான்று வழங்குமாறும் கேட்டிருப்பார். அதேபோல் இந்தியாவில் தான் எத்தனையாவது நபராகப் பிறந்திருக்கிறேன் என்றும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் எத்தனையாவது நபராக பிறந்திருக்கிறேன் என்றும் சான்று கேட்டு ஆட்சியரை மட்டுமல்ல அரங்கத்தில் கூடியிருக்கும் அத்தனை பேரையும் கிறுகிறுக்க வைப்பார். இதேபோல், தான் வைத்திருக்கும் பழைய 500 ரூபாயினை மாற்றித் தரச் சொல்லி அடம்பிடிப்பார். இதனால் மலைச்சாமி வந்துவிட்டாலே வில்லங்கமும் சேர்ந்து வருது என அதிகாரிகள் தெறித்து ஓடுவது வழக்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவைத் தனக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமீபகாலமாக இவர் கையில் எடுத்திருக்கும் விவகாரமான கோரிக்கை. கடந்த இரு வாரங்களுக்கு முன் சிந்துவின் புகைப்படம் ஒட்டிய மனுவை ஆட்சியர் வீரராகவ ராவிடம் மலைச்சாமி நீட்டினார்.

வழக்கம் போல் அந்த மனுவை வாங்கிக் கொண்ட ஆட்சியர், ``என்ன வேணும்'' எனக் கேட்க மலைச்சாமியோ ''தங்கப்பதக்கம் வாங்கி நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள பி.வி. சிந்துவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனவே, எப்படியாவது எனக்கு அவரை திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுங்க'' எனச் சொல்ல எதுவும் பேச முடியாமல் விக்கித்துப் போனார் ஆட்சியர். விவகாரமான இந்தக் கோரிக்கையால் அதிர்ந்து போன ஆட்சியர், மலைச்சாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

``இந்தியாவின் தங்க மங்கை. நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தவர் பி.வி. சிந்து. விளையாட்டுத் துறையில் பெரிய ஆள் அவர். அதனால அவர்தான் எனக்கு இணையான மனைவி எனக் கண்டறிந்தேன்.''
மலைச்சாமி

இந்நிலையில் இன்று மீண்டும் அதே கோரிக்கை மனுவுடன் கூட்ட அரங்கினுள் நுழைந்தார் மலைச்சாமி. இதை அறிந்த மீடியாக்காரர்களும் தயாராக இருந்தனர். குறைதீர் கூட்டத்தில் மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியிடம் தனது கோரிக்கையை முன்வைத்த மலைச்சாமி, ''பி.வி.சிந்துவை நான் திருமணம் செஞ்சுகிறதை பெருமை நினைக்கிறேன்'' எனச் சொல்ல, இடைமறித்த டி.ஆர்.ஓ ``போயிட்டு வாங்க சார்... விசாரிக்கிறோம்'' என எரிச்சலுடன் சொல்லி மலைச்சாமியை அனுப்பி வைத்தார்.

வெளியில் வந்த மலைச்சாமி, செய்தியாளர்களிடம் ``இந்தியாவின் தங்க மங்கை, நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தவர் பி.வி.சிந்து. விளையாட்டுத் துறையில் பெரிய ஆள் அவர். அதனால அவர்தான் எனக்கு இணையான மனைவி எனக் கண்டறிந்தேன். அதனால சிந்துவை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். எங்களோட திருமணத்தை கவர்ன்மென்டே நடத்தி வைக்கும்.

மலைச்சாமி
மலைச்சாமி

எனக்கு வெறும் 16 வயதுதான். இதை நிரூபிப்பேன். சிந்துவிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் உலகக் கோடீஸ்வரர் வரிசையில் நான் முதல் இடத்தில் கால் வச்சுருக்கேன்'' எனப் போட்டுத் தாக்க, அருகில் நின்று கேட்டவர்களும் மயங்கி விழாமல் இருக்க அருகில் இருந்த சுவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism