Published:Updated:

Chess Olympiad : 77 மெனு கார்டுகள்; 3500 வெரைட்டிகள்; 700 வகையான டிஷ்கள் - அசரவைக்கும் பட்டியல்!

சென்னை செஸ் திருவிழா

77 மெனு கார்டுகள்; 3500 வெரைட்டிகள்; 700 வகையான டிஷ்கள் - அசரவைக்கும் பட்டியல்!

Chess Olympiad : 77 மெனு கார்டுகள்; 3500 வெரைட்டிகள்; 700 வகையான டிஷ்கள் - அசரவைக்கும் பட்டியல்!

77 மெனு கார்டுகள்; 3500 வெரைட்டிகள்; 700 வகையான டிஷ்கள் - அசரவைக்கும் பட்டியல்!

Published:Updated:
சென்னை செஸ் திருவிழா

சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (ஜூலை 28) கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு கடந்த சில மாதங்களாகவே முழுவீச்சாக செய்து வருகிறது. இந்த செஸ் திருவிழாவைக் கோலாகலாமாகக் கொண்டாடும் விதமாக தலைநகர் சென்னையிலும், வேறு சில மாவட்டங்களிலும் செஸ் வடிவிலான அலங்காரங்கள், விளம்பரங்கள், கலை நிகழ்ச்சிகள் எனத் தமிழக அரசு அசத்தி வருகிறது. இந்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் கவனித்து வருகின்றன.

இந்தப் போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் பங்கேற்கிறார்கள். எனவே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்குகென மகாபலிபுரத்தைச் சுற்றியுள்ள இடங்களில் நட்சத்திர விடுதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

Chess Olympiad
Chess Olympiad

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு அந்தந்த நாடுகளின் உணவு வகைகள் மூலம் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் 77 மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 53 மெனு கார்டுகள் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. சிற்றுண்டிகள் மற்றும் சாஸ்கள் உள்பட 3500க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் உள்ளன. 700 உணவு வகைகள் இதில் இடம்பெற்றுவுள்ளதாகவும், இதில் பெரும்பாலான உணவு வகைகள் ஐரோப்பிய உணவுகள் வகையைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் ஒருநாள் அளிக்கப்படும் உணவு வகைகள் மறுநாளும் வராமல் இருக்க ஒவ்வொரு நாளும் புதிய வகை மெனுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், இந்த உணவு ஏற்பாடுகளின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் கவனிக்கத் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட உணவு ஏற்பாடுகளை இந்தியாவின் முன்னணி சமையற்கலைஞரான சென்னையைச் சேர்ந்த ஜி.எஸ். தல்வார் ஏற்பாடு செய்கிறார். செஸ் போட்டிகள் முடியும் வரை ஜூலை 28முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் திருவிழாவோடு சேர்த்து இந்த உணவுத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.