அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லிக்குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பணப்பட்டுவாடா நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளராக செந்தில் பாலாஜியும், தஞ்சாவூர் அதிமுக வேட்பாளராக எம்.ரெங்கசாமியும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தனர்.

திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ சீனிவேல் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானது. மேலும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, போட்டியிடும் விதமாக நெல்லித்தோப்பு காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவி ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து 3 தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிமுக தலைமைக் கழகம் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில்,  அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக தலைமை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியும், தஞ்சாவூரில் எம்.ரெங்கசாமியும், திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸும், நெல்லித்தோப்பில் ஓம்சக்தி சேகரும் போட்டியிடுகின்றனர்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!