மூடப்படுகிறதா கீழடி?

 

'கீழடியில் புதையுண்டு கிடந்த பழந்தமிழர் நகரத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். ' நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை மற்றும் ஆய்வுகளைத் தொடர்வதற்கான இடம் கிடைக்காதது போன்ற காரணங்களால் கீழடி ஆய்வு முடங்கிக் கிடக்கிறது' எனவும் வேதனைப்படுகின்றனர்.

சமீபத்தில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல் பொருட்களை பெங்களூருக்கு கொண்டு செல்ல கூடாதென்றும்,  தோண்டப்பட்ட குழிகளையும் மூடக்கூடாதென்றும் கனிமொழி என்பவர் தாக்கல் செயத வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை தடைபோட்டது.

இந்த நிலையில் நிலத்துக்காரர்களிடம் ஆய்வு முடிந்ததும்  ஒப்படைப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் குழிகளை மூடுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கடந்த 18-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது தொல்லியல்துறையினர் கோரியிருந்தார்கள். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த அடிப்படையில் தற்போது அக்குழிகளை மூடும் பணிகள் கீழடியில் நடந்து வருகிறது.

இது மக்கள் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ண, கீழடி ஆய்வு குழிகள் மூடப்படுவது ஏன் என்று தொல்லியல் குழுவினரிடம் கேட்டோம்,

"மழைக்காலம் துவங்குவதால்  குழிகளை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மூட வேண்டும்.  மூடி நிலத்துக்காரர்களிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். அதனால் மூடுகிறோம், விரைவில் மத்திய தொல்லியல்துறை உயர் நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்ய உள்ளது. அதன் பின்பு கீழடி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும்" என்றனர்.

- செ.சல்மான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!